உள்நாடு

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டில் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி, கோகலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாலை வேளையில், இந்த பகுதிகளில் மிகுந்த பனிமூட்டம் காணப்படுவதினால் வாகன போக்குவரத்தின் போது மிகுந்த கவனம் செலுத்துமாறும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய மலையகப் பிரதேசம் உட்பட நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை காரணமாக வீதிகளிலும் ரயில் பாதைகளிலும் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளன. பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல, ஹாலிஎல உள்ளிட்ட பிரதேச செயலக பிரிவுகளில் இந்நிலை காணப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பு – பதுளை பிரதான வீதியில் மரங்கஹவெல, ஹல்தும்முல்ல, தியதலாவ போன்ற பிரதேசங்களிலும், வெலிமட – பதுளை வீதியில் ஹாலிஎல, அம்பவக்க, மொரேதொட்ட பிரதேச வீதிகளிலும் மண்மேடு சரிந்து வீழ்ந்தமை மற்றும் கற்பாறைகள் வீழ்ந்த சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. ஹாலிஎல – அம்பவக்க பிரதேசத்தின் பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததனால், வெலிமட – பதுளை வீதியில் நேற்று வாகனப் போக்குவரத்து மூன்று மணிநேரம் தடைப்பட்டிருந்தது.

Related posts

டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை

editor

மறு அறிவித்தல் வரை ஓட்டுனர், நடத்துனர் விடுமுறை இரத்து

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவையினை இரத்து செய்வது தொடர்பில் அவதானம்