வகைப்படுத்தப்படாத

மூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் மாதம்

(UDHAYAM, COLOMBO) – மூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த மூன்று மாகாணங்களுக்கான பதவிக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.

அரசியல் அமைப்பு சரத்துக்களின் பிரகாரம் உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் பிற்போடப்பட்டிருந்தாலும், மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடு, அரசியல் அமைப்பில் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உலகின் மிக வயதான நபர் காலமானார்

කුසුම් පීරිස් මහත්මියගේ අවසන් කටයුතු අද

2019 ක්‍රිකට් ලෝක කුසලානය එංගලන්තයට