உள்நாடு

மூன்றாவது தடுப்பூசியாக பைசர்

(UTV | கொழும்பு) – மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்டோர், சிறுநீரக கோளாறு, புற்று நோய் போன்ற பாரதூரமான நோய்களைக் கொண்டுள்ள 30 – 60 வயதுக்கு உட்பட்டோருக்கு இவ்வாறு மூன்றாவது தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கும் இவ்வாறு பைஸர் தடுப்பூசியை செயலூட்டியாக செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸ் ஊடக பணிப்பாளராக கே.பி.மனதுங்க நியமனம்

editor

அசாத் சாலியால் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்

ராஜித சேனாரத்ன கைது