உள்நாடுபிராந்தியம்

மூதூர் ஆழிப்பேரலை 21வது நினைவேந்தல் – 200 மாணவர்களுக்கு கல்விப் பொருட்கள் வழங்கல்

மூதூரில் ஆழிப்பேரலையின் 21வது நினைவேந்தலைத் தொடர்ந்து, சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு கல்விப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (26) வெள்ளிக்கிழமை, தி/மூதூர் – அல்மனார் பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு ஈராக் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், பரக்கா நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி முஜீப் அவர்களால் கல்விப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த கல்விப் பொருட்கள், அவர்களின் கல்வி பயணத்திற்கு ஓர் ஊக்கமாகவும், சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலாகவும் அமைந்தது.

இந்நிகழ்வில் பொதுமக்கள், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்

Related posts

“சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வர அனுமதி கேட்கவில்லை” – ஹார்பர் மாஸ்டர்

மழையுடனான வானிலை இன்றும் நாளையும் தற்காலிகமாக அதிகரிக்கும்

வாகன இறக்குமதியை மீள அங்கீகரிப்பது: பரிந்துரைகள் ஜனதிபதியிடம் கையளிப்பு… நடக்கப்போவதென்ன!