உள்நாடுபிராந்தியம்

மூதூரில் மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதி கோர விபத்து – ஒருவர் படுகாயம்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை (04)
இடம்பெற்ற விபத்தில் வாத்திய கலைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதோடு மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்தவர் திருகோணமலையைச் சேர்ந்தவரென என மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் திருகோணமலையிலிருந்து மல்லிகைத்தீவில் நடைபெறவுள் திருமண வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

யானை தாக்கியதில் ஒருவர் பலி

editor

வெள்ளை சீனி இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

மத்திய கிழக்கிலிருந்து மேலும் சிலர் நாடு திரும்பினர்