உள்நாடுசூடான செய்திகள் 1

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் : இறுதி அறிக்கை புத்திஜீவிகளால் கையளிப்பு

எம்பிக்களின் முன்மொழிவுகளை உறுதி செய்த 27 இஸ்லாமிய அமைப்புக்கள், உலமாக்கள், சட்டத்தரணிகள்

(UTV | கொழும்பு) –

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பான இறுதி அறிக்கை  இன்று (23) ஆம் திகதி குறித்த அறிக்கை நீதி அமைச்சில் கௌரவ நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னால் ஆளுனர் கௌரவ அசாத் சாலி உள்ளிட்ட சுமார் 27 இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், சமூக சிவில் தலைவர்கள் மற்றும் உலமாக்கள் என பலரும் கந்துகொண்டனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் 18 பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகளை உறுதிப்படுத்தும் வகையிலேயே குறித்த ஆவணங்கள் அமைந்திருந்தன.

இதுபற்றி முன்னாள் ஆளுனர் அசாத் சாலி அவர்கள் நீதி அமைச்சருடனான சந்திப்பில் கூறியதாவது:

இந்தத் திருத்தத்தையே நாட்டின் முழு முஸ்லிம் சமூகமும் ஏற்றுள்ளது. தேவைப்பட்டால் எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்குள் ஒரு மில்லியன் கையெழுத்துக்களைப் பெற்றுத் தர முடியும். மேலும் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் இந்நாட்டு முஸ்லிம் மக்களினது உரிமையாகும். அது இம்மக்களின் விருப்பங்களுக்கு உட்பட்டவாரே திருத்தப்பட வேண்டும். அதனை எல்லோரும் விரும்பும் வகையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் திருத்தி அமைத்துள்ளது. எனவே அதனை முஸ்லிம் அல்லாதவர்கள் பலரும் திருத்தி அமைக்க நினைப்பது ஆச்சரியமாக உள்ளது. எனவே இந்த மும்மொழிவை தாங்கள் நீதி அமைச்சராக இருக்கும் காலத்திலேயே நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் சட்டத்தரணி நுஸ்ரா சறூக் அவர்கள்: முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது முஸ்லிம் சமூகத்தின் சட்டமாகும். அதனை முஸ்லிம்கள் தான் கையாள வேண்டும் எனவும் அது பற்றிய திருத்தத்தில் எமது இந்தக் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துடையவர்கள் ஒரு சிலர் மட்டுமே மேலும். பெண் காதி நீதிபதிகள் வெளிநாடுகளில் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அதனை எமக்கு ஆதாரமாக எடுக்க முடியாது. நாம் ஷரீஆவை திருக்குர்ஆனையும் ஹதீஸையும் தான் பின்பற்றி இச்சட்டத்தை அமைக்கவும் மற்றும் திருத்தம் செய்யவும் வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பெண் காதி நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கருத்துதைத்த அல்-ஆலிமா டாக்டர் மரீனா தாஹா ரிபாய் அவர்கள் : 1400 ஆண்டுகளாக இஸ்லாமிய வரலாற்றில் எந்தவொரு பெண் நீதிபதிகளும் நியமிக்கப்படவில்லை எனவும் அது ஆழ்ந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவேண்டிய விடயமாகும், அத்துடன் காதிநீதிபதிகளின் மாதாந்த ஊதியம் ஒரு சிறிய தொகையாகும். எனவே அது பற்றியும் நீதி அமைச்சு கவனம் செலுத்தி சீரமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

IMF அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் கவனம்

கோட்டா திறமையான அரசியல்வாதி அல்ல

இன்று முதல் பாண் விலையில் குறைவு