அரசியல்உள்நாடு

முஸ்லிம் பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை கோரி முத்து முஹம்மட் எம்.பி ஆளுனருக்கு கடிதம்

வடமாகாணத்தில் நிலவும் தற்போதைய சூழலை முன்னிட்டு, முஸ்லிம் பாடசாலைகளுக்கு உடனடி அவசர விடுமுறை வழங்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட் அவர்கள் வடமாகாண ஆளுனருக்கு இன்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தனது கடிதத்தில் அவர்,

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு,போக்குவரத்து சிக்கல்கள் மேலும் சில பகுதிகளில் உருவாகியுள்ள அமைதியற்ற நிலை என பல காரணங்களை முன்வைத்து, நிலைமை சீராகும் வரை குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆளுனர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

அதிவேகமாக ஆபத்தான முறையில் பஸ்களை ஓட்டிச் சென்ற சாரதிகள் கைது

editor

பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பதாரிகளுக்கான அறிவிப்பு

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் கடற்படையினர்