உள்நாடுசூடான செய்திகள் 1

முஸ்லிம் தனியார் சட்டத்தில் விரைவில் சுமுகமான தீர்வு – நீதி அமைச்சர் விஜேயதாச

(UTV | கொழும்பு) –

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள அறிக்கை மற்றும் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையிலான குழுவினர் தயாரித்து வழங்கியுள்ள அறிக்கை கவனத்தில் கொள்ளப்பட்டு சுமுகமான தீர்வு எட்டப்படும் என, நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபகஸவிடம் முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரியால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்குவதற்கான குழு அண்மையில் தமது சிபாரிசுகள் அடங்கிய மகஜரை நீதி அமைச்சரிடம் கையளித்திருந்தது.

இந்நிலையில், நீதி அமைச்சர், சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீனின் தலைமையிலான குழுவினரை தனது அமைச்சுக்கு அழைத்து இது தொடர்பாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஸ கலந்துரையாடியுள்ளார்.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திருத்த வரைபில் சில விடயங்களில் மாற்றங்களை கோரியுள்ளதை இந்தக் குழுவினரிடம் அவர் எடுத்து விளக்கினார். சட்டத்திருத்தம், இஸ்லாமிய வரையறையை மீறி வரைபு செய்யப்பட்டுள்ளதாக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்திருத்த வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்கள் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் திருத்தம் தொடர்பான வாதங்கள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு சுமுகமான தீர்வொன்றை எட்டுவதாக சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையிலான குழுவினரிடம் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம் – யாழில் சம்பவம்

editor

மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு இனிமேல் விநியோகிக்கப்படமாட்டது

பொய்யான தகவல்களை வௌியிட்ட இளைஞன் கைது