உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு வைத்தியசாலையில் உயிரிழந்த 12 வயது சிறுமி – முறையான விசாரணை வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான முறையான விசாரணை வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், கடந்த 21 ஆம் திகதி அந்த சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் சிறுமிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் காரணமாகவே சிறுமி உயிரிழந்தாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இன்றைய தினம் உயிரிழந்த சிறுமியின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற நிலையில் அவரது நண்பர்கள் சிறுமியின் உடலை ஏந்திச் சென்றுக்கு சிறுமிக்காக நீதிக்கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தவசீலன்

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து பொலிஸாரின் அறிவிப்பு

editor

புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று

கடற்படை வீரர்கள் 95 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று