உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு, மாங்குளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 வீதியின் 227ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த ‘ஹயஸ்’ ரக (Hiace) வேன் வாகனம் ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பு நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற குறித்த வாகனம், அவர்களைக் கொழும்பில் இறக்கிவிட்டு மீண்டும் கிளிநொச்சி நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வாகனத்தில் சாரதி மாத்திரமே இருந்துள்ளார். அவர் தெய்வாதீனமாக சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-தவசீலன்

Related posts

மின் கட்டணம் தொடர்பில் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

ஈஸ்டர் தாக்குதல் : சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை கைது செய்யுமாறு மனு

காலை 10 மணி வரை இடம்பெற்ற வாக்குப் பதிவு

editor