வகைப்படுத்தப்படாத

மும்பை குண்டு வெடிப்பில் தேடப்பட்ட தாவூத் இப்ராகிம் கூட்டாளி பரூக் துபாயில் கைது

(UTV| INDIA)- மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள்.

இதில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கிறான்.

குண்டு வெடிப்பில் தொடர்புடைய அவனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது துபாயில் பதுங்கி இருந்த தாவூத் இப்ராகிமின் மேலும் ஒரு கூட்டாளியான பரூக்தக்லா கைது செய்யப்பட்டான். இவன் 1993-ல் இருந்து தலைமறைவாக இருந்தான்.

1995-ம் ஆண்டு இவன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். 25 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்ட பரூக்தக்லா துபாயில் இருந்து மும்பை கொண்டு வரப்பட்டான்.

இன்று பரூக்தக்லாவை போலீசார் மும்பை தடா கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு

பௌத்த கொடியை பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கை

Suspect arrested while transporting 203kg of Kerala Ganja