உள்நாடு

முப்படையினரை மீண்டும் அழைத்துவரும் விசேட நடவடிக்கை இன்று

(UTV|கொழும்பு) – விடுமுறையில் உள்ள முப்படையினரை அவர்களது பணியிடங்களுக்கு மீண்டும் அழைத்துவரும் விசேட நடவடிக்கை இன்று(27) முன்னெடுக்கப்பட உள்ளது.

இதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முப்படையினரின் அனைத்து விடுமுறைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.

விடுமுறையில் உள்ள முப்படையினருக்கு போக்குவரத்து வசதிகள் இல்லாவிடின் அருகில் உள்ள முகாம்களை அணுகுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, அவர்களை அழைத்துவருவதற்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

‘மொட்டில் உள்ள பெருமளவிலான உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு..’

பொது தேர்தலுக்கான திகதி அறிவிப்பு [UPDATE]

முப்படையினருக்கு இஸ்ரேலில் பயிற்சி?