அரசியல்உள்நாடு

முன்மாதிரியாக செயற்பட்ட தமிழ்ப்பெண் அமைச்சர் சரோஜா போல்ராஜ்

ஜெனீவா மாநாட்டில் பங்குபற்றி நாடு திரும்பிய அமைச்சர் சரோஜா போல்ராஜ் தனக்கு கொடுக்கப்பட்ட செலவுக்கான பணத்தில் 69,960 ரூபாவை ($240) மீளவும் அரசாங்கத்திடம் கையளித்துள்ளார்.

ஜெனீவாவில், ஐக்கிய நாடுகள் சபையின் “பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை மாநாட்டின் (CEDAW)” 90 ஆவது அமர்வு, பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெற்றது.

இந்த அமர்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்துகொண்டார்.

இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக மேலதிக செலவுகளுக்காக, அமைச்சர் சாவித்திரி போல்ராஜூக்கு ஒரு நாளைக்கு 40 அமெரிக்க டொலர்கள் படி 6 நாட்களுக்கு 240 அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது.

அப் பணத்தை செலவு செய்யாத அமைச்சர், மீளவும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதுடன், அதற்கான பற்றுச்சீட்டையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேருந்து – ரயில் சேவைகள் நாளை மறுதினத்திலிருந்து வழமைக்கு

18 வயது மாணவி குழந்தையை யன்னல் வழியாக வீசிய சம்பவம் – 24 வயது காதலனுக்கு விளக்கமறியல்

editor

தொடருந்து சேவையில் தாமதம்!