சூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் வைத்தியசாலையில் அனுமதி

(UTV|COLOMBO) – ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் இன்று(02) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று(02) முன்னிலையாக முடியாது என, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சுகயீனமுற்று பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts

வடமாகாண ஆளுநர் தலைமையில் முல்லைத்தீவு காணிப்பிரச்சினை தொடர்பில் ஆராயும் கூட்டம்

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

பஸ் கட்டணம் அதிகரிப்பு