வகைப்படுத்தப்படாத

முன்னாள் பிரதியமைச்சர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

(UDHAYAM, COLOMBO) – அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த நிலையில், சொத்து விவரங்களை வெளியிடாமல் இருந்த சம்பவம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன, நீதிமன்றில் வைத்து தனது தவறை ஏற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை, கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள எதிரிக்கு, இம்மாதம் 20ஆம் திகதி தண்டனை விதிக்கப்படும் என, நீதவான் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக செயற்பட்ட 2005 – 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில், சொத்து விவரங்களை வெளிப்படுத்த தவறியதாக, கையூட்டு ஒழிப்பு ஆணைக்குழு, சரண குணவர்தனவுக்கு எதிராக இரண்டு வழக்குகளை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

ஊரடங்கு தொடர்பிலான விசேட அறிவித்தல்

US launches inquiry into French plan to tax tech giants

මහවැලිය – සංහිඳියාවේ ගංගාව” සහ “95න් පසු මහවැලි” ජනගත කිරීම අද ජනපති ප්‍රධානත්වයෙන්