சூடான செய்திகள் 1

முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கு எதிரான மனுவை விசாரிப்பதில் இருந்து ஒரு நீதியரசர் விலகியதன் காரணமாக மனு ஜூன் மாதம் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அதன்போது  இந்த மனுவை விசாரிப்பதில் இருந்து தான் விலகுவதாக நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன திறந்த நீதிமன்றில் அறிவித்ததை அடுத்தே மனு எதிர்வரும் ஜூன் மாதம் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றம் நாளை(19) பகல் வரை ஒத்திவைப்பு

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 303ஆக உயர்வு

வேதன ஆணைக்குழுவால் பலனில்லை-தொடரூந்து தொழிற்சங்கங்கள்