வகைப்படுத்தப்படாத

முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷவிற்கும் ,திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) கீழ் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இன்று சபையில் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு 154 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவிற்கு 61 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் வழங்கப்பட்டுள்ளனர்.

மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்படவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார். புலனாய்வுப்பிரிவினால் மேலும் பாதுகாப்பு தேவை என்று அறிவிக்கப்பட்டால் இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

பிலிப்பைன்ஸ் கடலில் விழுந்த அமெரிக்க கடற்படை விமானத்தில் பயணித்த 8 பேர் மீட்கப்பட்டனர்

1949 ஆம் ஆண்டுக்கு பின் சுட்டெரிக்கும் வெயில்!

கொரிய நாட்டவர் கைது