அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் வைத்தியசாலையில் தங்கியிருந்து தொடர்ந்து சிகிச்சை பெறுவார்

பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடுத்த சில நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள அந்த அலுவலகம், முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டதிலிருந்து அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்கான பரந்த போராட்ட இயக்கத்திற்கு பங்களித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

வைத்திய சிகிச்சை நிறைவடைந்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து தரப்பினரிடத்திலும் உரையாற்றுவார் என எதிர்பார்ப்பதாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நிறைவேறிய நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்!

சனத் நிஷாந்தவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

அமெரிக்கா புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி