அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் சூம் தொழிநுட்பம் ஊடாக வழக்கில் இணைந்தார்

அரச நிதியை முறைக்கேடாக பயன்படித்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக இந்த வழக்கில் இணைந்துள்ளார்.

பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளால் ‘சூம்’ தொழில்நுட்பம் மூலம் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Related posts

போட்டி பரீட்சையை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – கல்வியமைச்சின் அறிவிப்பு

விடுமுறைக்கு வீட்டிக்குச் சென்ற இளைஞர் சிறுமிக்கு செய்த காரியம்….

ஜனாதிபதியின் ஜெர்மன் உத்தியோகபூர்வ விஜயம் ஆரம்பம்

editor