அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டும் அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 25 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்து குறித்து வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 17 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அன்றைய தினம் முன்னிலையாக முடியாததால் வேறு ஒரு தினத்தை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார்.

இதன்படியே அவருக்கு மேற்குறிப்பிட்ட திகதியில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கோதுமை மா விலை அதிகரிப்பு குறித்து இன்று இறுதித் தீர்மானம்

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது எல்லை நீடிப்பு

TIKTOK படுகொலை : அறுவர் கைது