அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு கொழும்பில் வீடு உள்ளது – உதயங்க வீரதுங்க!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு மிரிஹானவின் கல்வல வீதியில் ஒரு வீடு இருப்பதாக அவரது உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

உதயங்க வீரதுங்க தனது பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவில், மஹிந்த ராஜபக்க்ஷ இந்த வீட்டை 1980 இல் வாங்கியதாகக் கூறினார்.

இந்த விவகாரம் குறித்த உதயங்க வீரதுங்கவின் பேஸ்புக் பதிவு கீழே காட்டப்பட்டுள்ளது.

‘மஹிந்த ராஜபக்க்ஷ, விஜேராம மாவத்தையில் உள்ள அதிகாரபூர்வ இல்லத்தில் இரவு விருந்தில் கலந்து கொண்ட ஒரே நபர் நான்தான். உண்மையில், விஜேராம இல்லத்தை விட்டு வெளியேற அவருக்கு மனமில்லை,

ஆனால் மிரிஹானவில் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல முடியாதது குறித்து அவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியதை நான் அவதானித்தேன்.

1980 ஆம் ஆண்டு மிரிஹானவின் கல்வல வீதியில் தனது முதல் வீட்டை வாங்கியதாக மஹிந்த ஐயா நினைவு கூர்ந்தார்.

அந்த வீட்டிலிருந்து ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்க வெளிநாடு சென்றேன்.

Related posts

சற்றுமுன்னர் கெஹலிய சிஐடி முன்னிலை!

லிட்ரோ விலை மேலும் குறைவு

தினமும் 07 மணி நேர மின் வெட்டு தொடர்பில் வெளியான தகவல்

editor