அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கம் பொறுப்பாகும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறதா என்பது குறித்து இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி – உரிமைச் சட்டம் ஏதேனும் ஒரு வகையில் திருத்தப்பட்டு, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து சிக்கல் நிறைந்த சூழ்நிலை ஏற்பட்டால், முன்னாள் ஜனாதிபதியாக அவருக்கு இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட தேவையான வசதிகள் வழங்கப்படாவிட்டால், அரசாங்கம் அந்தப் பொறுப்பை எவ்வாறு ஏற்கும்?

“இங்கே, நாங்கள் யாருக்கும் விசேடமாக எதையும் செய்வதில்லை. தற்போது உயிருடன் உள்ள ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் குறித்து நாங்கள் பொதுவான முடிவு ஒன்றை எடுத்தோம்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கம் பொறுப்பாகும்.

இது பாதுகாப்பு சபையில் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. புலனாய்வு அறிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அறிக்கைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.”

Related posts

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் – அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

editor

இலங்கையுடன் வலுவான இராஜதந்திர உறவுகளை பேண ருவாண்டா எதிர்பார்ப்பு

editor

அதிபர், ஆசிரியர் சம்பள உயர்வு குறித்து பிரதமர் ஹரிணி விசேட அறிவிப்பு

editor