உள்நாடு

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை – சந்தேக நபர் கைது.

இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தம்மிக்க நிரோசன சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (18) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனை தெரிவித்தார்.

இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தம்மிக்க நிரோசன கடந்த 16 ஆம் திகதி அம்பலாங்கொட கந்தெவத்தை பகுதியில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது மூன்று சந்தேக நபர்கள் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சூதாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மேலும் 708 பேர் குணமடைந்தனர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

editor

பங்களாதேஷிடமிருந்து மற்றுமொரு மனிதாபிமான உதவி