அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கொங்கிறீட் வீதிகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100 திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை மாவட்டம் முழுவதும் முன்னெடுத்து வருகிறார்.

அதன் ஒரு அங்கமாக அட்டாளைச்சேனை பிரதேச உள்ளக வீதிகள் மக்கள் பாவனைக்கு பொருத்தமற்றதாக உள்ளதை நிவர்த்திக்கும் வகையில் தனது டீ- 100 திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை 16 பிரிவின் ஈஸ்ட் வீதி மற்றும் உடையார் குறுக்கு வீதிகளை கொங்கிறீட் வீதிகளாக புனரமைக்க சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் கொங்கிறீட் வீதிகளாக புனரமைக்கப்பட்டுள்ள இந்த வீதியை முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மேலும் இந்த பிரதேசத்தில் முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இந்த விஜயத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் ஆலோசகர் எம்.ஜே.எம். அன்வர் நௌஸாத், வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா உட்பட முன்னாள் எம்.பி ஹரீஸ் அவர்களின் இணைப்பாளர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

-நூருல் ஹுதா உமர்

Related posts

பவுசரில் கொண்டு சென்ற டீசலை திருடிய சாரதியும், உதவியாளரும் விளக்கமறியலில்

editor

இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை

பாகிஸ்தான் கைதிகள் 43பேர் மீளவும் அந்நாட்டுக்கு