அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான, செவனகல கிரியிப்பன் வெவ பகுதியில் உள்ள காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் உட்பட பல சொத்துக்கள் 09.05.2022 அன்று நடைபெற்ற பொதுமக்கள் போராட்டத்தின் போது சேதமடைந்தன.

மேற்படி சொத்துக்கான இழப்பீட்டின் போது, அந்த காணி இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமானது என அடையாளப்படுத்தப்பட்டதால் இழப்பீடு மறுக்கப்பட்ட போதிலும், அதற்கு மாறாக, இழப்பீட்டு அலுவலகத்தில் இணைக்கப்பட்ட சில அரசு அதிகாரிகளுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்ததாக சஷீந்திர ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த இழப்பீட்டை பெற்றதன் மூலம் ஊழல் செய்தல் மற்றும் சதி செய்தலுடன், இந்த சொத்துக்கள் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமானது என்பதால், மகாவலி அதிகாரசபையின் சொத்துக்கள் குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சஷீந்திர ராஜபக்ஷ மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை திறப்பதற்கு அனுமதி

டிசம்பருக்குள் காணிகள் விடுவிக்கப்படும் – பவித்திரா வன்னியராச்சி.

கொரோனா நோயாளிகள் 8 பேர் பூரண குணம்