அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் பிணை மனு நிராகரிப்பு – மீண்டும் விளக்கமறியல்

கிரிபத்கொடை பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மஹர நீதவான் நீதிமன்றத்தின் பிரதான நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னிலையில் பிரசன்ன ரணவீர இன்று (14) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

பிரசன்ன ரணவீர சமர்ப்பித்த பிணை மனுவையும் நீதவான் நிராகரித்தார்.

Related posts

பொத்தானையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்கொண்டாட்டம்

editor

வாகன இறக்குமதியை மீள அங்கீகரிப்பது: பரிந்துரைகள் ஜனதிபதியிடம் கையளிப்பு… நடக்கப்போவதென்ன!

ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் நாடகமே விசேட உரை!