உள்நாடு

முன்னாள் அமைச்சர்கள் இருந்த சிறைச்சாலையில் சிக்கிய கையடக்க தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேலதிகமாக, சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையின் ‘கே’ வார்டில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பல முன்னாள் அமைச்சர்கள் அந்த வார்டில் உள்ள கைதிகளில் அடங்குவதாகக் கூறப்படுகிறது.

மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, எம்.எஸ். ரஞ்சித் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கைதிகள் அந்த சிறைச்சாலை வார்டில் தங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு செயட்பாடுகள் மீண்டும் ஆரம்பம்?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் குறித்து தகவல் வெளியிட்ட நிசாம் காரியப்பர் எம்.பி

editor

கஞ்சாவுடன் கைதான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர்!