ஊவா மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கான விலைகள் கோரப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பிரதிப் பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த காலங்களில் ஊவா மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் பயன்படுத்திய அதிக பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவுகள் கொண்ட இந்த வாகனங்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வாகனங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் கோரப்பட்டு, ஆகஸ்ட் 25 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு அதிக விலை கொடுப்பவர்களுக்கு வாகனங்கள் விற்கப்படும்.