அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த, நளின் ஆகியோரின் மேன்முறையீடு விசாரணைக்கு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் குறித்த தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேன்முறையீடுகளை ஜனவரி மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மேன்முறையீடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது குறித்த மேன்முறையீடுகளை ஜனவரி மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.

இந்த மேன்முறையீடுகள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகிய இருவரும் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெற்காசியாவுக்கான சிறந்த விமான நிறுவனமாக தெரிவு

editor

இளைஞர் சமுதாயத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

editor

ஜனாதிபதியின் தலைமையில் 2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு

editor