அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சி.ஐ.டி அழைப்பு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை (9) காலை 9:00 மணிக்கு குற்றப் புலனாய்வுத்திணைக்களம் அதன் சிறப்பு புலனாய்வுப் பிரிவு 4 இல் ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களை இலங்கை சுங்கத்துறை முறையான ஆய்வு இல்லாமல் விடுவித்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பாவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 29, 2025 அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பாக வீரவன்ச தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

‘தங்கல்ல சுத்தா’ பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 5485 இலங்கையர்கள் நாட்டுக்கு

சவூதி அரேபியா தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரவுக்குமிடையில் சந்திப்பு

editor