அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (30) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவியேற்ற பின் இரண்டாம் ஆண்டு விழாவிற்காக இலங்கை முதலீட்டு சபையின் நிதியைப் பயன்படுத்தி செய்தித்தாள்களில் விளம்பரங்கள் பிரசுரித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.7 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த இருவருக்கும் எதிராக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

🔴 JUST IN : எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம்

editor

மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் – அமைச்சர் அலி சப்ரி

editor