அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகற்றும் பணியை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்ததால் அரசாங்கத்திற்கு 2.6 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுத்தியதாக கூறி, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக நேற்று (26) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்தது.

இந்த வழக்கு நேற்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, விசாரணைகள் முடிவடைந்த பின்னர், சந்தேக நபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்போது நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு 2026 ஜனவரி 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Related posts

 இரத்தினம் மற்றும் ஆபரண கண்காட்சி இம்மாதம் கொழும்பில்

New Diamond பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம்

𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞: ஜனாதிபதியின் பதவிக்கால மனு: வழக்கில் நடந்தது என்ன? (முழு விபரம் )