அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதால், அதிகாரிகள் மாலபேயில் உள்ள அவரது வீட்டிற்குச் இன்று (21) சென்று அறிவித்தல் ஒன்றை ஒட்டியுள்ளனர்.

நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஆஜராகுமாறு தெரிவித்தே குறித்த அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகற்றும் திட்டத்தை சட்டவிரோதமாக செயல்படுத்தியதால் அரசுக்கு 262 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவின் சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இதேவேளை, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (20) நோட்டீஸ் அனுப்பியது.

Related posts

நிவாரண கொடுப்பனவுகள் தொடர்பிலான அறிக்கை

இன்றும் 2 மணி நேரம் மின்வெட்டு

கடந்த கால அரசுகளைப் போன்று அநுர அரசும் ஏமாற்றும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது – ஜோசப் ஸ்டாலின்

editor