அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

தனது சட்டபூர்வமான வருமானத்திற்கு அப்பால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளைப் பராமரித்ததன் மூலம் இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள் தொழிலாளர் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி மற்றும் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கும் இடையிலான காலப்பகுதியில் பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் இந்தக் குற்றத்தைச் செய்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, கடவத்தை பகுதியில் காணி ஒன்றை கொள்வனவு செய்வதற்காக ஒரு கோடியே 39 இலட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பணத்தை செலவு செய்துள்ளதுடன், கொழும்பு-07, அர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் காணி ஒன்றை கொள்வனவு செய்வதற்காக 7 கோடியே 13 இலட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பணத்தையும் முன்னாள் அமைச்சர் செலவு செய்துள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மகன் மாலக சில்வாவிற்காக mercedes benz காரை கொள்வனவு செய்வதற்காக 3 கோடியே 23 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை செலவு செய்துள்ளதாகவும், ஹூண்டாய் காரை கொள்வனவு செய்வதற்காக 55 லட்சத்திற்கும் அதிகளவான பணத்தையும், டிஃபென்டர் வாகனத்தை கொள்வனவு செய்வதற்காக 88 லட்சத்து 50 ஆயிரம் பணத்தையும் செலவிட்டுள்ளமை உட்பட தனது சட்டப்பூர்வ வருமானத்திற்கு அப்பால் சொத்துக்களை ஈட்டியதன் மூலம் இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் ஊடாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Related posts

ஓய்வூதியத்துடன் மேலதிக கொடுப்பனவு – தினேஷ் குணவர்தன.

ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார் பிரதமர் ஹரிணி!

editor

டக்ளஸ் மற்றும் முன்னாள் முன்னாள் முரளிதரனுக்கு இடையில் சந்திப்பு!