அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் டக்ளஸுக்கு எதிரான பிடியாணை மீள பெறப்பட்டது

வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க ஆஜராகாத காரணத்தினால் கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (25) கொழும்பு நீதவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணிகள் ஊடாக ஆஜரானார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு உத்தரவிட்டார்.

அதன்பின், முன் பிணையில் வெளிவந்த தேவானந்தாவை அடுத்த நீதிமன்ற திகதியில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

2016ஆம் ஆண்டு தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகரான சுப்பிரமணியம் மனோகரனுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

உண்மையான வசந்தம் இனித்தான் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

editor

உக்ரைனிலிருந்து தொடர்ந்தும் பயணிகள் வருகை

மண்ணெண்ணெய் விலை குறைப்பு – பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை

editor