அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு புதிய பதவி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனமானது நேற்றைய தினம் (09) இடம்பெற்ற கட்சியின் விசேட கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்காக முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை நிறுவுவதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கான குழுவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி நியமித்திருந்தது.

இந்நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், புதிய செயற்பாட்டு பிரதானி ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக செயற்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Related posts

பிரதமர் தனது அலுவலக ஊழியர்களை வீட்டிலிருந்து செய்யக் கோருகிறார்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் – மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

editor

2024 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வி தவணை ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு!