உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக 27 கோடி ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை ஈட்டிய விதம் தொடர்பிலான விபரங்களை வெளியிட தவறியமை தொடர்பில் அவருக்கு இவ்வாறு குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றில் அதனை தாக்கல் செய்தது.

கெஹெலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட செயலாளராகவும் செயற்ப்பட்டுள்ள குறித்த பிரதிவாதிக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கு எதிராக ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது

வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவை என்பன அத்தியாவசிய சேவை பிரிவுக்குள்

நாளை முதல் ரயில் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை