உள்நாடு

முன் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) –இம்மாத இறுதிக்குள் முன் பள்ளிகளைத் திறப்பதே தமது இலக்கு என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து படிப்படியாக நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்கு உள்ளது.

அதனடிப்படையில் கட்டம் கட்டமாகப் பாடசாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதன் ஒரு அங்கமாக முன் பள்ளிகளைத் திறக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நான்கு கட்டங்களாக பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

2021ஆம் ஆண்டுக்கான அரச விடுமுறைகள்

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்

சுகாதாரத்துறைக்கு அதிரடி சட்டங்களை விதித்து ஜனாதிபதி உத்தரவு!