உள்நாடுபிராந்தியம்

முந்தல் பகுதியில் கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – மூவர் பலி – பலர் காயம்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் முந்தலம், நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயம்

கொழும்பு புறக்கோட்டையில் மிதந்த ஆணின் சடலம் மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

editor

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டிற்கு வரும் முதலீடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – ஜனாதிபதி அநுர

editor