உள்நாடு

முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறையினால் நிந்தவூர் கலாச்சார மண்டபத்திற்கு விடிவு காலம் பிறந்தது

நிந்தவூர் வரலாற்றில் உருவான அரசியல் தலமைகளில் (Visionary Politician) தொலைநோக்கு சிந்தனையுடைய அரசியல் வாதியாக குறிப்பிட்டு சொல்லக்கூடியவராக இருப்பவர்தான் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்.

இதற்கு அவர் தொடர்ச்சியாக மூன்று முறை நிந்தவூரின் தவிசாளராக இருந்து மேற்கொண்ட மக்கள் நலத்திட்டங்கள் இன்றும், என்றும் சாட்சியாக இருக்கின்றது.

அதற்காக மக்கள் வழங்கிய நன்றிக்கடன் இன்று அவர் பாராளுமன்ற உறுப்பினராக கடந்த காலங்களில் இருந்தவர்களைப் போன்றல்லாமல் மக்களுக்கு செய்ய வேண்டிய விடயங்களை மிகக் கவனமாக கையாண்டு வருவதுடன் பராளுமன்றத்தில் எதிர்கட்சி வரிசை உறுப்பினராக இருந்தும் அதனை சாக்கு போக்கு சொல்லி மக்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சிகளை அவர் ஒருபோதும் செய்யவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை முழுவதுமாக மக்கள் சேவைக்காவே பயன்படுத்தி வருகிறார் என்பதற்கு அவரது பாரளுமன்ற உரைகளும் அவரது தொடர் முயற்சிகளும் சான்று பகர்கின்றது.

அந்த அடிப்படையில் தான் நிந்தவூர் கலாச்சார மண்டபம் தொடர்பில் அவரால் முன்னெடுக்கப்பட்ட விடயம் மிகவும் காத்திரமானதாக பார்க்க முடிகின்றது.

அந்த கலாச்சார மண்டபத்தின் முழுமையான வரைபடம், திட்ட முன்மொழிவு, மதிப்பீட்டறிக்கை போன்றவற்றை தன்னுடைய முயற்சியானல் தயாரித்து மாவட்ட செயலகம், நகர அபிவிருத்தி திட்டமிடல் அமைச்சு மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு சமர்ப்பித்திருந்தார்.

இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 300 மில்லியனானது அக்கலாச்சார மண்டபத்தை முழுமையாக முடிப்பதற்கான நிதி அல்ல. அதைக் கொண்டு ஒரு பகுதியை மாத்திரமே செய்ய முடியும். இதனை முழுமையாக நிறைவுக்கு கொண்டு வர சகல திட்ட வரைபடங்களும் மதிப்பீட்டு அறிக்கைகளும் தயார்படுத்தப்பட்டு உரிய தரப்பினர்களுக்கு கையளிக்கப்பட்டிருக்கின்றது.

இதுவே ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயன்முறையாகும் இவற்றை மிக கவனமாகவும் சட்ட ரீதியாகவும் முறையான ஆவணங்களுடனும் வழங்கியதனால் தான் ஜனாதிபதி அவர்கள் வரவு செலவு திட்டத்தில் உள்வாங்கி நிதியையும் ஒதுக்கீடு செய்திருக்கின்றார்.

இவை எல்லாவற்றிற்கும் உறுதுணையாக இருந்து சகல சந்தர்ப்பங்களிலும் உதவி, ஆலோசனைகளையும் ஒத்தாசைகளையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்கள் வழங்கியிருந்தமை மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பிற்கு பின்னரான தலைமைகளில் முதன்மையானவர் றிஷாட் பதியுதீன் என்பதை நிரூபித்திருக்கின்றார்.

நாங்கள் செய்தோம் என்று சொல்கிறவர்கள் மேற்சொன்ன படிதுறைகளில் ஏதாவது ஒன்றையாவது நினைத்துப்பார்த்திருப்பீர்களா என்பதே சந்தேகம் தான்.

இவ்வாறன ஆவணங்களுடன் நிந்தவூர் பிரதேச ஒருங்கினைப்பு குழு கூட்டத்தில் கடந்த 28.01.2025 அன்று வரவு செலவு திட்ட முன்மொழிவில் சேர்த்துக் கொள்வதற்காக பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதியை கோரி தனது முன்மொழிவை முன்வைத்தார். (ஆதாரம் – 01வது இலக்கமிடப்பட்ட படம் – பிரதேச ஒருங்கிணைப்பு குழு நிகழ்ச்சி நிரல்)

கடந்த 05.02.2025 திகதியிடப்பட்ட முன்மொழிவின் மூலம் 11.02.2025 அம்பாறை மாவட்ட ஒருங்கிணப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இதைனை பகுதியளவில் நிறைவு செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
(ஆதாரம் – 02வது இலக்கிமிடப்பட்ட படம் – 11.02.2025 மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டறிக்கை)

அதே போல் கடந்த 27.05.2025 அன்றைய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரினால் முன்மொழிவாக கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டு தேசிய திட்டமிடல் திணைக்களத்திற்கு அனுமதி கோரி அனுப்புவதாக தீர்மானிக்ப்பட்டிருந்தது.
(ஆதாரம் – 03வது இலக்கமிடப்பட்ட படம் – 27.05.2025 மாவட்ட ஒருங்கிணப்பு குழு கூட்டறிக்கை)

அதே போல கடந்த 25.07.2025 திகதியிடப்பட்ட முன்மொழிவின் மூலம் 31.07.2025 அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இவ்விடயம் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆலோசனைக்குற்படுத்தப்பட்டது.
(ஆதாரம் – 04வது இலக்கமிடப்பட்ட படம் – 31.07.2025 மாவட்ட ஒருங்கிணைப்பு குழு முன்மொழிவு)

அதற்கிடையில் 24.09.2025 திகதியிடப்பட்ட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தேசிய திட்டமிடல் திணைக்களத்திற்கு அனுமதி கோரிய கடிதத்தின் பிரதி இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
(ஆதாரம் – 05வது இலக்கமிடப்பட்ட படம் – அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரால் பராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்)

பின்னர் 01.10.2025 திகதியிடப்பட்ட கடிதம் மூலம் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களிடம் நிந்தவூர் கலாச்சார மண்டபத்திற்கான நிதியினை ஒதுக்கி முன்மொழிவை வரவு செலவு திட்டத்தில் இணைத்து கொள்ளுமாறு கேட்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவை (Budget Proposal) பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் அனுப்பி வைத்திருந்தார்.
(ஆதாரம் – 06வது இலக்கமிடப்பட்ட படம் – ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்)

இவற்றின் பிரகாரம் முறையான சட்டவிதிகளுக்கமைவாக, நிபுணர்களின் ஆலோசனைப்படி, தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாக நேற்று ஜனாதிபதியினால் இந்நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்…

இப்படி அம்பாறை மாவட்டம் முழுவதும் பல விடயங்கள் தொடர்பிலான முறையான திட்டங்களுடன் பல்வேறு முயற்சிகளை பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் மேற்கொண்டு வருகின்றார்.

சம்மாந்துறை பஸ் டிப்போ, இறக்காமம் சுற்றுலா நீதிமன்றம், மாவடிப்பள்ளி பாலம், கிட்டங்கி பாலம், நிந்தவூரின் 2ம் 3ம் குறுக்குத்தெரு வீதி, நிந்தவூர் அஸ்- ஸபா பாடசாலைக் கட்டிட நிர்மாணம் என்று பல்வேறு விடயங்கள் செயற்பாட்டில் உள்ளன.

இவை தவிர இந்த மாவட்டத்தில் உள்ள இன்னும் பல விடயங்கள் தீர்க்கப்பட வேண்டியிருக்கின்றது அவையெல்லாம் அடையாளம் காணப்பட்டு திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. விரைவில் அவற்றிற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

அஷ்ரப் தாஹிர் என்பவர் பெயருக்கும் பதவிக்குமாக அரசியலுக்குள் நுழைந்தவருமல்ல அதற்காக பாராளுமன்ற ஆசனத்துக்கு ஆசைப்பட்டவருமல்ல மக்கள் நலனை விரும்புகின்ற மக்கள் தேவைகளை நிறைவேற்றுகின்ற நேர்மையான அரசியல் வாதி என்பதற்கு அவருடைய செயற்பாடுகள் ஒவ்வொன்றும் சாட்சி.

இந்த கலாச்சார மண்டபம் தொடர்பில் இவருடைய முயற்சிகள் நிந்தவூர் பிரதேச மட்ட அரச அதிகாரிகள் தொடக்கம் மாவட்ட, தேசிய அதிகாரிகள் வரையில் அறிந்த விடயமாகவிருந்தாலும் அவர்கள் யாரும் இது வரை வெளிப்படுத்தாமலிருப்பது வேதனைக்குறியது தான்.

எது எவ்வாறாக இருந்தாலும் தொடர்ந்தும் மக்கள் பணிக்காக சளைக்காமல் பயணிக்க இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

வென்று வெல்வோம் எனும் தாரக மந்திரத்தை இப்பொழுது புரியாவிட்டால் இனியெப்போது புரிந்து கொள்வீர்?

-முஹம்மட் தம்பி முஹம்மட் றிம்ஸான்

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் 13,320 வழக்குத் தாக்கல்

கஞ்சாவுடன் 2 கடற்படை அதிகாரிகள் கைது

கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் அது கனவாகவே இருக்கும் – ஜனாதிபதி அநுர

editor