விளையாட்டு

முதல் போட்டியில் இருந்து பாபர் அசாம் விலகல்

(UTV | நியூசிலாந்து) –  நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் பாபர் அசாம் விலகியுள்ளார்.

டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றுள்ளது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

டி20 தொடர் முடிந்த பின்னர் முதல் டெஸ்ட் 26 ஆம் திகதியும் 2-வது போட்டி ஜனவரி 3 ஆம் திகதியும் ஆரம்பமாகிறது.

இந்த நிலையில் பாபர் அசாமுக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாததால் அவர் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சாமரி அதபத்து தொடக்க பெண்கள் CPL போட்டிக்கு

தனுஷ்க குணதிலக்கவின் இரண்டாவது பிணை மனு மீதான பரிசீலனை டிசம்பரில்

தென் ஆபிரிக்க அணி செப்டெம்பரில் இலங்கைக்கு