சூடான செய்திகள் 1

முதலாம் தரத்திற்கான மாணவர்கள் இன்று(17) பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்

(UTV|COLOMBO)-2019ம் கல்வியாண்டிற்கு முதலாம் தரத்திற்கான மாணவர்கள் இன்று(17) பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுகின்றனர்.

இதற்கான தேசிய வைபவம், கிரிவுல்ல கனேகொட ஆரம்ப வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் உள்ள 10,194 பாடசாலைகளில், 9,193 பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகள் இயங்குகின்றன.

இந்நிலையில், வருடாந்தம் 3 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் முதலாம் தரத்திற்காக பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

மத்தள சர்வதேச விமான நிலைய சேதம் தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிப்பு..

சீனப் பிரஜைகள் 14 பேர் கைது

ஐ.தே.க. – கூட்டமைப்பு அரசு என்றே கூற வேண்டும் – தயாசிறி