உள்நாடு

முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பண்டிகைக் காலப்பகுதியில் முட்டையின் விலை அதிகரிக்கும் என சிலர் வௌியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து முட்டையை இறக்குமதி செய்யும் நோக்கில் சிலரால் இந்தத் தவறான கருத்துக்கள் வெளியிடப்படுவதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

முட்டையை ரூபாய் 45க்கு குறைவான விலையில் வழங்க முடியும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் மழை

புதன்கிழமை விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!!

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3296 பேர் கைது