அரசியல்உள்நாடு

முடிவுக்கு வந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லயின் வழக்கு

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (16) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இந்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவைத் தவிர ஏனைய பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

அதன்படி, இந்த வழக்கினைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதால், வழக்கை முடிவுக்குக் கொண்டுவருமாறு ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரியது.

அதற்கமைய, குறித்த வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவிட்டது.

வெகுஜன ஊடக, சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், தனது தனிப்பட்ட பணியாளர் குழாமில் சிலரின் பெயர்களைச் சேர்த்து, அவர்களுக்குரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டதன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த விசாரணையை முன்னெடுத்திருந்தது.

Related posts

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள உப அமைச்சர் தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு

editor

மருந்து இறக்குமதிக்கு 80 மில்லியன் டாலர் ஒதுக்கீடு

சீனாவில் இருந்து 10.6 மெட்ரிக் டன் டீசல் நன்கொடை