வகைப்படுத்தப்படாத

‘முடியாது என்று கூறப்பட்டவைகளை எல்லாம் அபிவிருத்திகளாக செயற்படுத்திக் காட்டியுள்ளோம்’

(UTV|COLOMBO)-வடக்கில், முசலியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக எமது அயராத முயற்சியினால் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணி, இன்னும் ஓரிரு வருடங்களில் அகதி மக்களின் மீள்குடியேற்ற பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

முசலி பிரதேச சபைத் தேர்தலில், மருதமடு, வேப்பங்குளம் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் பைரூஸின் தேர்தல் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வும், வேட்பாளர் அறிமுகக் கூட்டமும் நேற்றுமுன்தினம் (17) வேப்பங்குளத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

முசலியில் எல்லாப் பிரதேசங்களிலும் நாங்கள் அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் என்று பாராமல் பாதிக்கப்பட்ட அத்தனை மக்களுக்கும் உதவியிருக்கின்றோம். கொட்டில்களாக இருந்தவற்றை வீடுகளாக மாற்றியுள்ளோம். காடடர்ந்திருந்த பூர்வீகக் காணிகளை துப்புரவாக்கி பாடசாலை கட்டிடங்களையும், இறை இல்லங்களையும் உருவாக்கியுள்ளோம். முடியாது என்று கூறப்பட்ட விடயங்களை எல்லாம் அபிவிருத்திகளாக மாற்றி மக்களுக்கு நன்மை செய்துள்ளோம்.

ஆனால், தேர்தல் காலங்களில் மட்டும் இந்தப் பிரதேசத்துக்கு வரும் பொட்டணி வியாபரிகளும், சீசன் வியாபாரிகளும் எம்மை குறைகூறி வருகின்றனர்.

வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக உங்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். இவ்வாறு புலம்புவோர், இந்தப் பிரதேசத்துக்கு ஏதாவது ஒன்றைத்தானும் செய்திருக்கின்றார்களா? அவர்கள் சார்ந்த கட்சியினால் எதைக்கொண்டு வந்து தந்தார்கள்? எவ்வாறான அபிவிருத்தி முயற்சிகளை இந்தப் பிரதேசத்துக்கு மேற்கொண்டிருக்கிறார்கள்? முசலி மண்ணில் மீளக்குடியேறி வாழ்ந்து வரும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள, ஏதாவது ஒரு பிரச்சினைகளுக்கு இவர்கள் முகங்கொடுத்திருக்கின்றார்களா? குறைந்தது ஒத்துழைப்பைத் தானும் வழங்கியுள்ளார்களா? உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுக் கேட்டுப்பாருங்கள். எதையுமே செய்யாது வாக்குகளுக்காக மட்டும் இங்கே வந்து அதைத் தருவோம், இதைத் தருவோம் என்று கதை அளக்கின்றனர்.

இவர்களின் ஒரே நோக்கம் இந்தப் பிரதேசத்தில் பணிபுரியும் மக்கள் காங்கிரஸின் தலைமையை பலவீனப்படுத்துவதும், கட்சியின் மக்கள் பிரதிநிதித்துவங்களை இல்லாமலாக்குவதுமே. இதனை நாங்கள் ஒரு சதியாகத்தான் பார்க்கின்றோம்.

பாடல்களும், கோஷங்களும், தனித்துவப் பெருமைகளும், தம்பட்டங்களும் வீர வசனங்களும் உங்களுக்கு ஒருபோதுமே, சோறுபோடப் போவதில்லை. நாங்கள் எந்தக் காலத்திலும் உங்களுடன்தான் இருக்கின்றோம். உங்களுக்கு உதவி வருகின்றோம். எனவே, இவர்களின் வார்த்தைஜாலங்களுக்கு நீங்கள் ஏமாற வேண்டாம். உங்கள் பிரதிநிதித்துவத்தை மண்ணாக்கி விடாதீர்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கரடுமுரடான பாதையில் பயணித்து வந்தாலும், எமது இலட்சியம் தெளிவானது. நோக்கம் தூய்மையானது.

எனவே, இந்தத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆதரித்து, முசலிப் பிரதேச சபையை மீண்டும் நாங்கள் கைப்பற்ற உங்கள் வாக்குகளை எமக்கு வழங்குங்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/CROUD.jpg”]

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Australian swimmer refuses to join rival on podium

“15% of Lankans suffering from malnutrition” -President Sirisena

Several Ruhuna Univeristy faculties reopen today