சூடான செய்திகள் 1

முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக பொய் பிரசாரங்களை மேற்கொண்ட பேருவளை நபர் ஒருவர் CCD இனால் விசாரணைக்கு

(UTV|COLOMBO) கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொய் மற்றும் அவதூறு செய்திகளை பரப்பி வந்த முக்கிய புள்ளியான பேருவளையைச் சேர்ந்த அஸாப் அஹ்மத் என்ற நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் (CCD) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அண்மையில் துபாயில் கைது செய்யப்பட்ட மதூஷ் மற்றும் கஞ்சிபானை இம்ரான் என்பவா்களோடு தொடர்பு படுத்தி முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக சமூக ஊடகங்களில் திட்டமிட்டு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

“ட்ரூ முஸ்லிம்” என்ற வட்ஸ்அப் குழுமத்தை நடாத்தி வரும் பேருவளையைச் சேர்ந்த அஸாப் அஹமட் என்ற நபரே இந்த பொய் மற்றும் அவதூறு பிரசாரத்தை பரப்பி வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதாள உலகத்துடன் தன்னை தொடர்புபடுத்தி பரப்பப்பட்ட குறித்த அவதூறு பிரசாரத்தின் மூலமாக தன்னை ஏனைய குழுக்கள் இலக்கு வைப்பதற்கு சந்தா்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருப்பதாகவும், தனக்கு மரண அச்சுறுத்தல் ஒன்றை ஏற்படுத்துவதற்கு குறித்த அரசியல் சக்திகள் திட்டமிட்டே இந்த பிரசாரத்தை பரப்பி வந்ததாகவும் முஜீபுர் றஹ்மான் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடொன்றை அண்மையில் பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

நாலக சில்வாவின் கருத்துக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு உத்தரவு

அனைத்து அரசியல் கட்சிகளினதும், சொத்து விபரங்கள் எதிர்வரும் வாரம் வலைத்தளத்தில்

ஜனாதிபதி தேர்தல் களத்தில் சமல் ராஜபக்ஸ