உள்நாடு

முஜீபுருக்கு புதிய கடமையை ஒப்படைத்த சபாநாயகர்!

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்ற பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (04) சபாநாயகரின் அறிவிப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். சபாநாயகர் தனது அறிவிப்பின்போது,

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 இன் ஏற்பாடுகள் மற்றும் 2024 பெப்ரவரி 09 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காகவும் முஜிபுர் ரஹுமான் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

 

Related posts

மேல் மாகாணம் அதிக அபாயமுள்ள வலயமாக பிரகடனம்

நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதவிநீக்கம் – ஜனாதிபதி ரணில்

editor

அரிசி – சீனி : உச்சபட்ச சில்லறை விலைகள் இன்று நிர்ணயம்