உள்நாடுபிராந்தியம்

முச்சக்கரவண்டியொன்று திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியுள்ளது

நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று இன்று (13) அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியின் உரிமையாளர் நாவலப்பிட்டி தெகிந்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் மீண்டும் திரும்புகையில், இன்று (13) அதிகாலை நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் திடீரென தீ ஏற்பட்டதாகவும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவே தீ விபத்துக்கான காரணம் என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

-க.கிஷாந்தன்

Related posts

வீடுகளில் பிள்ளைகளுக்கு உலகக் கல்வி மட்டும் போதாது – ஒவ்வொரு வீடுகளிலும் மார்க்க அறிஞர்கள் உருவாக வேண்டும் – அஷ்ரப் தாஹிர் எம்.பி

editor

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழப்பு

தங்காலையில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு

editor