அரசியல்உள்நாடு

முசலியை கைப்பற்றிய NPP – மக்கள் காங்கிரஸுக்கு உப தவிசாளர்

மன்னார், முசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், தேசிய மக்கள் சக்தியும் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன், மன்னார், முசலி பிரதேச சபையின் புதிய தவிசாளராக, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் நலீம் மற்றும் உப தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் தன்சீம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

முதல் 01 வருடம் தேசிய மக்கள் சக்திக்கும், அதன் பிற்பாடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் தவிசாளர் பதவி என்ற உடன்படிக்கையின் பிரகாரம், நலீம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தையல் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

editor

முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன் பிணையில் விடுதலை!

editor

கிழக்கு ஆளுநரின் இணைப்பாளர் பதவிகளை ஏற்க வேண்டாம் – மக்கள் காங்கிரஸ் அறிவுறுத்தல்.