அரசியல்உள்நாடு

முசலி மக்களை ஏமாற்றும் NGO மிஹ்லார் – தேர்தல் அதிகாரிகளிடம் சிக்கினார்

மன்னார், முசலி பிரதேசத்தில் மக்களுக்கு வீடு தறுவதாக ஏமாற்றி வாக்குகளை சூறையாட முற்பட்ட முஸ்லிம் ஹேண்ட் (UK) நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியும், ISRC நிறுவனத்தின் தவிசாளருமான மிஹ்லார் முசலி மக்களால் விரட்டியடடிக்கப்பட்டு, மக்களால் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் முறைப்பாடு வழங்கிய சம்பவம் இன்றைய தினம் (06) அகத்திமுறிப்பு வாக்குச்சாவடிக்கு முன்னாள் பதிவாகியுள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெற்றுவரும் இச் சந்தர்ப்பத்தில், வீடு தருவதாகவும், நீர் இணைப்பு தருவதாகவும் போலி வாக்குறுதிகளை கொடுத்துக்கொடுத்து எமது தரப்புக்கு வாக்களிக்குமாறு கோரிய சந்தர்பத்தில் இன்றைய தினம் மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரும், தேர்தல் முறைப்பாட்டுக்குழு தலைவருமான றொஹானிடம் முறைப்பாடு வழங்கியதையடுத்து களத்திற்கு சென்ற தேர்தல் முறைப்பாட்டுக்குழு தலைவரிடம் வாக்குவாதத்தில் மிஹ்லார் ஈடுபட்டதாகவும் தெரியவருகின்றது.

வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரை வைத்துக்கொண்டு இவ்வாறன மாமூல் அரசியலை மேற்கொள்ளும் இவ்வாற செயற்பாட்டை நிறுத்த வேண்டும் என முசலி மக்கள் தங்களது எதிர்பை வெளியிட்டுருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்டி நில அதிர்வு குறித்து ஆய்வு

தொற்றாளர்கள் குறையவில்லை : பணிப்புறக்கணிப்பினால் முடிவுகளில் தாமதம்

இலங்கை அரசு ரிஷாதை தடுத்து வைத்திருப்பதன் நோக்கம்?